இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இடம் பெற்றிருந்தவர் அசோக் திண்டா. இவர் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திண்டா, இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பதும் ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார் என்பதும் 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர் 69 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் திண்டா, தான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா ஓய்வு பெற்றுள்ளதால் மேற்குவங்க மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

COMMENTS

Wordpress (0)