இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின விழா

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின விழா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தின பிரதான விழா தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்று வருகின்றது.

பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதில் தொற்று பரவலைத் தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இம்முறை படைவீரர்கள், பொலிஸார் அடங்கலாக சுமார் ஆறாயிரம் பேர் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)