இன்னாள் ஜனாதிபதி மன்னிப்புக் கோருவாரா?

இன்னாள் ஜனாதிபதி மன்னிப்புக் கோருவாரா?

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது குடும்ப ஆட்சி தொடர்பில் செய்திகளில் வெளியான விமர்சனங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பின் ஆங்கில இணையம் ஒன்று இக்குறித்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா, பொலநறுவையில் அரச பணியாளர்களை அழைத்து சமூக சேவை திட்டம் ஒன்றை மேற்கொண்டமை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வின் போது மகன் தஹமை ஜனாதிபதி அழைத்துச் சென்றமை ஆகிய செயல்கள், மஹிந்த ராஜபக்ஷவை போன்று குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்ட மைத்திரி முயல்கிறார் என்று அடிப்படையில் செய்திகளாக வெளியாகியிருந்தன.

அதேநேரம் இந்த விடயங்கள் தொடர்பில் மைத்திரிபால விளக்கமளிக்க வேண்டும் அத்துடன் 2015, ஜனவரி 8ல் இடம்பெற்ற நல்லாட்சியின் ஆரம்பத்தை மைத்திரி ஏற்றுக்கொள்வாராக இருந்தால் அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(riz)