ஒரே நாளில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ரியானா

ஒரே நாளில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ரியானா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் திடீரென ஒருவரை ஒரே நாளில் பிரபலமாக்கி விடுகிறது. ஏதாவது ஒரு விசயம் ட்ரெண்டிங்க் ஆகி விடுகிறது. அதை பற்றி அதிகம் பகிர்ந்து வருவதும் தொடர்கதை ஆகிவிட்டது.

இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் சமீப நாட்களாக தலை தூக்கியுள்ளது. உலகின் மற்ற பகுதிகளிலிருந்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை மியா கலிஃபாவை தொடர்ந்து பிரபல பாப் பாடகி ரியானா ஆதரவு தெரிவிக்க அந்த ட்வீட் வைரலாகியுள்ளது.

டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால் இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் அவரின் மதம், பின்னணி குறித்து கூகுளில் அதிகம் தேடத்தொடங்கியுள்ளார்களாம்.

இதனால், ரியானா நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆனார். மேலும் மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கும் குரல் கொடுத்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)