தேசியக் கொடியை மாற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சி கேள்விக்குறியே

தேசியக் கொடியை மாற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சி கேள்விக்குறியே

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் தேசியக் கொடியை மாற்ற அரசாங்கத்தால் மேற்கொள்ளும் முயற்சி வருந்தத்தக்கது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தேசியக் கொடியை மாற்றுமாறு மக்களிடமிருந்து எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படாத நிலையில் குறுகிய நோக்கங்களுக்காக இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய கொடியின் சிங்க சின்னத்தில் சில மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் விரும்புகிறது என்று ஓய்வு பெற்ற பாதுகாப்பு பொதுச் செயலாளர் கமல் குணரத்ன வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ருவான் விஜேவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.