![கொவிட் 19 – 735 : 04 [UPDATE] கொவிட் 19 – 735 : 04 [UPDATE]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2020/12/COVID-19.jpg)
கொவிட் 19 – 735 : 04 [UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 735 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் எண்ணிக்கை 67,850 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் நேற்றைய தினம் 894 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 61,461 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 343 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் 6,046 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.