முன்னாள் சபாநாயகரின் உடல் நிலை கவலைக்கிடம்

முன்னாள் சபாநாயகரின் உடல் நிலை கவலைக்கிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் டபிள்யு. ஜே.எம். லொக்குபண்டாரவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவர் நேற்று(08) தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை ஐ.டி.எச் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)