கொழும்பில் எகிறும் கொரோனா

கொழும்பில் எகிறும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றுறுதியான 887 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

214 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 208 பேரும், பதுளை மாவட்டத்தில் 181 பேரும், காலி மாவட்டத்தில் 50 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 47 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 40 பேரும் பதிவாகினர்.

அம்பாறை மாவட்டத்தில் 33 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 21 பேரும், கண்டி மாவட்டத்தில் 20 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 17 பேரும், கேகாலை மாவட்டத்தில் 12 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 9 பேரும் பதிவாகினர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 5 பேரும், நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 4 பேரும், திருகோணமலை, மொனராகலை, பொலனறுவை மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)