உடல் அடக்கம் : தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது

உடல் அடக்கம் : தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதாக நேற்று(10) பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த போதிலும் தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது எனவும் அவர்களோடு கலந்துரையாடியே முடிவெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

நேற்றைய அறிவிப்பின் பின்னணியில் எப்போது சுற்று நிருபம் வெளியாகும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே சற்று முன்னர் சுதர்ஷனி இவ்வாறு பதிலளித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)