இலங்கை – ஜப்பான் : பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கப்பாடு

இலங்கை – ஜப்பான் : பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்குமிடையில் பொருளாதார ஒத்துழைப்பை மீளாய்வு செய்யவும், சமகாலத்தில் பொருத்தமான பகுதிகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதிவு செய்யப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சார தொடர்புகளின் வலுவான அடித்தளங்களை நினைவுபடுத்தி, தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் கொள்கை முன்னுரிமைகள் குறித்தும் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்கள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)