மியன்மார் இராணுவத் தலைமைகளுக்கு பொருளாதாரத் தடை

மியன்மார் இராணுவத் தலைமைகளுக்கு பொருளாதாரத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ்  அமெரிக்கா) – மியன்மார் இராணுவத் தலைவர்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.

இராணுவ புரட்சியுடன் தொடர்புடைய தலைவர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வர்த்த நடவடிக்கைகள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாருக்கு அமெரிக்காவினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியும் தடை செய்யப்பட்டுள்ளது.
மியன்மார் தலைவர் ஆங் சாங் சூச்சி மற்றும் ஜனாதிபதி வின் மிண்ட் உள்ளிட்ட ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை மியன்மார் இராணுவம் கைது செய்துள்ளது. அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மியன்மார் இராணுவத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் மியன்மார் தலைநகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இராணுவத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் துறவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.