நீர்த்தேக்கத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

நீர்த்தேக்கத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  நுவரெலியா) – தலைவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவி ஒருவரின் சடலம் இன்று(12) காலை மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் ரத்மில்லகெலே ஜனபதய சேர்ந்த நாராயணசாமி முனுசியா வயது (16) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர் தலவாக்கலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி எனவும் தெரிவிக்கப்படுகிறது

குறித்த மாணவியின் வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இன்று ஆறு முப்பது மணியளவில் குறித்த நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாகவும் அதனை கண்ட பொது மகன் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து குறித்த யுவதியின் சடலத்தினை இன்று (12) 9.00 மணியளவில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

COMMENTS

Wordpress (0)