கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டம்

கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று(13) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள பிரேரனைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் ஆகியன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)