முன்னாள் சபாநாயகரின் இறுதிக்கிரியைகள் இன்று

முன்னாள் சபாநாயகரின் இறுதிக்கிரியைகள் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முன்னாள் சபாநாயகர் வி.ஜ.மு லொக்குபண்டாரவின் இறுதிக்கிரியைகள் இன்று(15) மதியம் கொட்டிகாவத்தையில் இடம்பெறவுள்ளது.

அவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு அவர், மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு(14) வி.ஜே.மு லொக்குபண்டார உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

1941 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஹப்புத்தளையில் பிறந்த விஜேசிங்க ஜயவீர முதியன்சலாகே லொக்குபண்டார 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.

அவர், 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் 18வது சபாநாயகராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)