ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 120 பேருக்கு காயம்

ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 120 பேருக்கு காயம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜப்பான்) – ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டடங்கள் இடிந்து, சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், 120 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்க அபாயம் நிறைந்த ஃபுகுஷிமா, மியாகி பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் சனிக்கிழமை இரவு ஏற்பட்டதாகவும் ரிக்டா் அளவுகோலில் அது 7.3 அலகுகளாகப் பதிவானதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

COMMENTS

Wordpress (0)