ஆபிரிக்க நாடுகளில் மீளவும் எபோலா தொற்று பரவல்

ஆபிரிக்க நாடுகளில் மீளவும் எபோலா தொற்று பரவல்

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஆப்பிரிக்கா) – ஆப்பிரிக்க நாடுகளில் மீளவும் ஏற்பட்டுள்ள எபோலா தொற்று பரவல் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கினியா குடியரசில் எபோலா வைரஸ் தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வைரஸ் தொற்று சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நோய் தொற்றின் அறிகுறிகளுடன் உயிரிழந்த ஒருவரின் சடலம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, உயிரிழந்த நபரின் சடங்குகளில் பங்குபற்றிய 8 பேருக்கு குறித்த தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஏனையோர் கினியா குடியரசு நாட்டின் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)