கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி

கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய, இந்தியாவின் சீரம் நிறுவனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு இடையில் கொரோனா தடுப்பூசி கொள்வனவுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 18 நாட்களில் 1 இலட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நன்கொடையாக நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நேற்றைய நாளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 92 ஆயிரத்து 938 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.