கொழும்பில் தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

கொழும்பில் தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 756 கொரோனா நோயாளர்கள் பதவாகியுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் நேற்றைய தினத்தில் மேலும் 06 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது.

 

 

COMMENTS

Wordpress (0)