அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது

அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் கண்டு ஏமாற்றமடைகிறேன். அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு அன்புக்குரியவர்கள் மற்றும் மக்களது உரிமைகளுக்கு ஜனநாயக அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.