அமைச்சர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இரகசியமாக தடுப்பூசி [VIDEO]

அமைச்சர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இரகசியமாக தடுப்பூசி [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகள் அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரகசியமாக வழங்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று(17) இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 16ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக கூறப்பட்டது. எனினும் முழுமையாக தகவல்களை ஊடகங்களில் வெளியிடவில்லை.

அமைச்சரவை தகவல்களை வெளியிடும் ஊடக சந்திப்பில், அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் தடுப்பூசி பெற்றுக்கொண்டீர்களா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட உறுப்பினர்களின் விபரங்கள் தொடர்பாக வெளியிட்ட பட்டியலில் உதய கம்மன்பிலவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இரகசியமாக தடுப்பூசி பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)