களுத்துறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலில்

களுத்துறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக எதிர்வரும் 21ம் திகதி 10 மணித்தியாலம் 30 நிமிடம் கொத்ஹேன நீர்சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதன்படி பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, பொதுவிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொடை, பெந்தொட்ட, பயாகல, பேருவளை, பெந்தோட்ட, போம்புவல – பிலிமினாவத்தை, மக்கோன, அளுத்கம – தர்கா நகர் ஆகிய பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

COMMENTS

Wordpress (0)