இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களைக் கூறி வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய டேவிட் சாகருக்கு பதிலாக இவர் பெயரிடப்பட்டுள்ளார்.

டேவிட் சாகர் வியாழக்கிழமை (பிப்ரவரி 18) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)