கொரோனா தடுப்பூசி : சீரம் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து

கொரோனா தடுப்பூசி : சீரம் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கான இந்தியாவின் சீரம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது.

இதற்கமைய, 10 மில்லியன் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்துடனான குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கையெழுத்திட்டுள்ளதற்கமைய, குறித்த கொரோனா தடுப்பூசிக்கான கட்டணம் இன்று செலுத்தப்பட வேண்டுமெனவும் குறித்த கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

 

COMMENTS

Wordpress (0)