2021 ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் இன்று ஆரம்பம்

2021 ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் இன்று ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான்) – 2021 ஆண்டுக்கான 20க்கு 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் Karachi kings மற்றும் Quetta gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி , கராச்சி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30க்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, Lahore Qalanders மற்றும் Peshawar Zalmi ஆகிய அணிகள் இரண்டாவது போட்டியில் நாளை மோதவுள்ளன.

இதன்படி, குறித்த போட்டி கராச்சி சர்வதேச விளையாட்டரங்கில் நாளை பிற்பகல் 2.30 அளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

COMMENTS

Wordpress (0)