பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தார்.

நேற்று(22) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தாம் தயாரான நிலையில், இன்று (23) முற்பகல் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை போக்குவரத்து அமைச்சர் வழங்கியுள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்திருந்தார்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் கலந்துரையாடலில் தங்களின் கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடி, தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என போக்குவரத்து அமைச்சர் தொலைபேசியூடாக நேற்றிரவு(22) அறிவித்ததாக இந்திக தொடங்கொட மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

COMMENTS

Wordpress (0)