ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இன்று தினேஷ் உரை

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இன்று தினேஷ் உரை

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெனீவா) – வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இன்று(23) இரவு உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று(22) ஆரம்பமாகிய நிலையில்,
இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தயாரித்துள்ள அறிக்கை குறித்து நாளை (24) விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்முறை கூட்டத் தொடர் இணையவழியில் நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.