வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் இராஜினாமா

வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணத்தை நேற்று(22) இரவு மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது .

இதனிடையே, தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே குறித்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆலோசர் குழுவிலிருந்தும் தான் விலகவுதாக அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)