‘சலார்’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

‘சலார்’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் படங்களில் நடிக்கும் பிரபாஸ், கே.ஜி.எப்., புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்திலும் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் கலந்த, தாதா தொடர்பான கதையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் 14ல் படம் வெளியாவதாக இப்போதே அறிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய, ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகிறது.