தாயும் பூசகர் பெண்ணும் விளக்கமறியலில்

தாயும் பூசகர் பெண்ணும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  காலி) – மாந்தீரிக பூஜையால் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுமியின் தாயை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெல்கொட – மீகஹாவத்தை பகுதியில் கைதான அவர் இன்று(01) மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

பாத்திமா மரணம் தொடர்பில் 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு

மீகஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மத சடங்கொன்றின் போது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் மத சடங்கினை மேற்கொண்ட பெண் இன்று(01) மஹர நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மத சடங்கினை மேற்கொண்ட பெண் குறித்த சிறுமியை பிரம்பால் அடித்துள்ள நிலையில் தெல்கொட மீகஹவத்தை பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ரிப்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று(01) ராகமை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் ​மேலும் தெரிவித்தார்.