உருமாறிய கொரோனா தொற்று முதல் முறையாக இங்கிலாந்தில்

உருமாறிய கொரோனா தொற்று முதல் முறையாக இங்கிலாந்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இங்கிலாந்து) – பிரேசிலில் காணப்பட்ட B1 வகை உருமாறிய கொரோனா தொற்று முதல் முறையாக இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த 3 பேர் மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த 3 பேருக்கு பிரேசிலின் மனாஸ் நகரில் காணப்பட்ட மாறுபட்ட கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேர் பிரேசில் சென்று வந்த காரணத்தால் பரவி இருக்கும் என்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த 3 பேருக்கு பரவியதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.