இன்று முதல் 3 நாட்களுக்கு வானில் சாகசம்

இன்று முதல் 3 நாட்களுக்கு வானில் சாகசம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் 5ம் திகதி வரையில் வான் சாகச கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வானது இன்று(03) முற்பகல் காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக இலங்கை விமானப்படையினருடன் இந்திய விமானப்படையினரும் இணைந்து வான் சாகசங்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் விமானப்படை மற்றும் கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தி 23 விமானங்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளன.

இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவு தினம் நேற்றைய தினம் (02) கொண்டாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.