ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை

ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை

(ஃபாஸ்ட் நியூஸ் |  ரஷ்யா) – ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) நஞ்சூட்டப்பட்டதன் பின்னணியில் ரஷ்யாவின் உளவுத்துறை மற்றும் அரசு காணப்படுதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ரஷ்யாவின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் 6 அதிகாரிகள் மீது தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்கா தடைகளை அமுல்படுத்தியது.

அலெக்ஸி நவால்னி, ரஷ்ய ஜனாதிபதியின் உயர் விமர்சகர் எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், குறித்த குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.

இதனிடையே, தசைகள் மற்றும் உடல் இயக்கத்தை முடக்கும் நஞ்சு மருந்துகள் பனிப்போர் காலப் பகுதியில் ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்டதாகவும் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுகின்றது.