ஹிஜாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஹிஜாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாத உறுப்பினர் ஒருவருடன் நெருங்கி செயற்பட்டு, அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தடுத்து வைக்கப்பட்ட வண்ணாத்துவில்லு மதரஸா பாடசாலையின் அதிபர் மொஹமட் ஷகீரும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.