(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
கனேடிய நகரமொன்றில் கத்திக்குத்து தாக்குதலினால் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் மத்திய பிராந்தியத்திலுள்ள சஸ்கட்காட்சுவான் மாகாணத்தின் வெல்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் 13 இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் டேமியன் சண்டர்சன் (இடது) மைலிஸ் சண்டர்சன்
இத்தாக்குதல்களை நடத்திய சந்தேக நபர்கள் டேமியன் சண்டர்சன் மற்றும் மைலிஸ் சண்டர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய இந்நபர்கள் ஆபத்தானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இச்சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.