முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு பதிலாக ஆஜரான சட்டத்தரணி திமித்ர அபேசேகர
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று(19) காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, இன்று(19) காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
தப்புல டி லிவேராவிற்கு பதிலாக விடயங்களை முன்வைப்பதற்காக சட்டத்தரணி திமித்ர அபேசேகர பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று(19) ஆஜரானார்.