லங்கா பிரீமியர் லீக்கின் சூதாட்டம் பெயர் பொறித்த சீருடையுடன் விளையாட பாபர் அஸாம் மறுப்பு..!

லங்கா பிரீமியர் லீக்கின் சூதாட்டம் பெயர் பொறித்த சீருடையுடன் விளையாட பாபர் அஸாம் மறுப்பு..!

பாகிஸ்தான் கிரிக்கட் அணித்­த­லைவர் பாபர் அஸாம், பந்தய நிறு­வ­னத்தின் பெயர் பொறிக்­கப்­பட்ட சீரு­டையை அணிந்து விளை­யா­டு­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

இம்­மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் ஆரம்­ப­மா­க­வுள்ள லங்கா பிரீ­மியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்­கேற்கும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தலை­வ­ராக விளை­யா­டு­வ­தற்கு பாபர் அஸாம் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்ளார்.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பந்தய நிறு­வனம் ஒன்­றுடன் ஒப்­பந்தம் செய்­துள்­ளதன் கார­ண­மாக, குறித்த நிறு­வ­னத்தின் பெயரை அணி வீரர்­களின் சீரு­டையில் பொறிக்க வேண்டும் என்­பது நிபந்­த­னை­யாகும். எனினும் தற்­போது ஹஜ் யாத்­திரை முடித்து நாடு திரும்­பி­யுள்ள பாபர் அஸாம், இஸ்­லாத்தில் தடை செய்­யப்­பட்­டுள்ள சூதாட்­டத்தை ஊக்­கு­விக்கும் விளம்­ப­ரத்­திற்கு தான் துணை போக முடி­யாது என கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்­வா­கத்­திற்கு அறி­வித்­துள்ளார். இதே­வேளை, பாபர் அஸாமின் இத் தீர்­மா­னத்தை தாம் மதிப்­ப­தாக குறித்த நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் நட்­சத்­திர வீரர்­க­ளான பாபர் அஸாம் மற்றும் முகமட் ரிஸ்வான் ஆகியோர் இம்­முறை ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்­றி­ருந்­தனர். தற்­போது ஹஜ் முடிந்து நாடு திரும்­பி­யுள்ள இரு­வரும் அணியின் பயிற்­சி­களில் பங்­கேற்­றுள்­ள­துடன் எதிர்­வரும் 16 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள இலங்கை அணிக்­கெ­தி­ரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.