
அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது.
அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையில் இருந்து நீக்குவதற்கு பிரதி சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.
சபையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, பிரதி சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
எனினும் தற்போது பாராளுமன்ற நடவடிக்ககைள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
Update 11.30 pm
———————–
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால், சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சற்று முன்னர் சபையில் இதனை அறிவித்துள்ளார்.