
பத்தரமுல்லை ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து நீர்கொழும்பில் ஆசிரியர்கள் போராட்டம்..!
நீர்கொழும்பு சென். பீற்றர் கல்லூரி (நீர்கொழும்பு புனித பேதுரு மத்திய மகா வித்தியாலயம்) முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (27) பாடசாலை முடிவடைந்த பின்னர், பிற்பகல் 1.35 மணியளவில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக கடந்த 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆசிரியர்கள், அதிபர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 45 நிமிடங்களாக நடந்த இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததோடு, அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.





