நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் – பெரும்பான்மையில்லாவிட்டால் – ஜேவிபி என்ன செய்யும்? அனுரகுமாரதிசநாயக்க..!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் – பெரும்பான்மையில்லாவிட்டால் – ஜேவிபி என்ன செய்யும்? அனுரகுமாரதிசநாயக்க..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையின்றி வெற்றிபெற்றால் ஏனையகட்சிகளின் ஆதரவை பெறவேண்டியிருக்கும் என ஜேவிபி தலைவர் அனுரகுமாரதிசநாயக்க அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றியவேளை வாக்காளர்கள் நாடாளுமன்றத்தின் பாதுகாவலர்கள் அல்லது கண்காணிப்பாளர்களை தெரிவு செய்யும் வழமையான பாரம்பரிய செயற்பாட்டிற்கு பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தால் அவர்களது தெரிவை கௌரவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் எங்களிற்கு அதிகாரத்தினை வழங்கினால் ஆனால் 113 பெரும்பான்மையை வழங்காவிட்டால் நாங்கள் கட்சிகளுடன் இல்லை சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியிருக்கும் என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் நாங்கள்தான் அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என விரும்பினால் அதனை நாங்கள் புறக்கணிக்க முடியாது நாங்கள் எப்படியும் அரசாங்கத்தை அமைக்கவேண்டும் அதற்காக நாங்கள் மூலோபாயமொன்றை வகுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஒக்டோபரில்நடைபெறவேண்டிய ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் வேறு தேர்தல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்பதால் ரணில் விக்கிரமசிங்க முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்தமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆளும் பொதுஜனபெரமுன நெருக்கடியான நிலையில் உள்ளது முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெற்றால் அது கட்சிக்கு பேரிடியாக அமையும் இதன் காரணமாக அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்கும் பட்சத்திலேயே முன்கூட்டிய நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் அவர் அதனை செய்யமாட்டார் வரவுசெலவுதிட்டமும் தோற்கடிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.