இஸ்ரேலுக்கு சென்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த எலோன் மஸ்க்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது.
நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் எலோன் மஸ்க் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமருடனான சந்திப்பின் பின்னர், அந்நாட்டு ஜனாதிபதி ஹெர்சாக் உடனும் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சமூக ஊடகங்களில் யூதர்களுக்கு எதிரான வெறுப்பை அதிகரிக்கும் செயற்பாடுகள் மற்றும் பதிவுகள் தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எலோன் மஸ்க் உண்மைகளை விளக்கவுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.