சில அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகளை வெளியிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது.
ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா.
இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாய்
ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபா.
இதன் சில்லறை விலை 290 – 310 ரூபாய்.
நெத்தலி (இறக்குமதி செய்யப்பட்டது) ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 1000 ரூபா.
இதன் சில்லறை விலை 1100 -1500 ரூபாய்.
ஒரு கிலோ பெரிய வெங்காயம்(இறக்குமதி செய்யப்பட்ட) மொத்த விலை 400 ரூபா
சில்லறை விலை ரூ.450 – 570 ஆகவும் உள்ளது.
உருளைக்கிழங்கின் (இறக்குமதி) மொத்த விலை 145 ரூபாய்.
சில்லறை விலை 180 – 210 ரூபாய்.
ஒரு கிலோ மைசூர் பருப்பு 290 ரூபாய்.
சில்லறை விலை 300 – 360 ரூபாய்.