எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தமை உண்மை, ஆனால் அங்கு தங்கக் குதிரைகள் எத்தனையும் திருடவில்லை..!

எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தமை உண்மை, ஆனால் அங்கு தங்கக் குதிரைகள் எத்தனையும் திருடவில்லை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தனது மூத்த மகள் வீட்டில் தங்க குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தமை உண்மை, அந்த வீட்டில் இருந்து பால் பாக்கெட்டுகள் போன்ற சில உணவுகளையும்
பானங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். தங்கக் குதிரைகள் என அந்த வீட்டில் எதுவும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் செய்தித்தாள் வாசிப்பாளர் ஒருவர் தனது மகளின் வீட்டில் திருடப்பட்டுள்ளமை குறித்து மிக அநாகரீகமாக செய்தியினை விவரித்திருந்தார்.

அரச தலைவர் ஒருவருக்கு பரிசில்கள் வழங்கினால், அதனை மகளின் வீட்டில் வைப்பது சரியா எனக் கேட்டிருந்தார்.

கத்தார் விஜயத்தின் போது என்னைப் பாதுகாக்கச் சென்றவர்களுக்கு அந்நாட்டுத் தலைவர் சுமார் பத்து இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை வழங்கினார்.

எனக்கு அதிகாரப்பூர்வமாக தருவதை தந்தார்கள். நான் ஜனாதிபதியாக இருந்தபோது கிடைத்த பரிசுகள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் உள்ளன. எனக்கு கிடைத்த பொருட்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு அறை உள்ளது. அந்த பரிசுகளை முந்தைய ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை…’