ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்து அமைச்சுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும் பதில் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கும் பதில் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள பதில் அமைச்சர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பதில் அமைச்சர் – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன
பதில் பாதுகாப்பு அமைச்சர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான பதில் அமைச்சர் – தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கான பதில் அமைச்சர் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான பதில் அமைச்சர் – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன