மைத்திரியின் மகள் சத்துரிக்கா விவகாரம்: சம்சுதீன் குறித்து நீதிமன்றில் சட்டத்தரணி தகவல்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களின் புகைப்படங்களைக் காட்டி 27,660,000 ரூபா மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பபபில் வேறு சந்தேக நபர்கள் இருப்பின் அவர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியரான குணசிறிலால் என்ற சந்தேக நபர் தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் சார்பில் ஆஜரான .ஹரிஸ்க சமரநாயக்க இதனை நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபரைக் கைது செய்யத் தவறிவிட்டதாக சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் சந்தேக நபரான குணசிறிலால் பாதுகாப்பு உத்தியோகத்தரின் நண்பர் எனவும், கொழும்பில் விடுவிக்கப்படாத 8 வாகனங்கள் தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய தகவல்களை தனது கட்சிக்காரரே வழங்கியதாகவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
துறைமுகம்.பாதுகாப்பு உத்தியோகத்தர் கொடுத்த 8 புகைப்படங்கள், தனது கட்சிக்காரருக்குத் தெரிந்த வெலிமடை பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் என்ற மனுதாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் வாதி பல சந்தேக நபர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முறைப்பாட்டைக் கையாளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியும் முறைப்பாட்டை கையாண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிவான், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.