
மின் கட்டணம் குறைப்பு; மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) ஒட்டுமொத்தமாக மின்சாரக் கட்டணங்களை சராசரியாக 20% குறைக்க முடிவு செய்துள்ளதாக PUCSL இன் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் இன்று (17) அறிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கான கட்டணத் திருத்தம் இன்று (17) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.