பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் வௌியானது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்றாகும் என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைமை கால்நடை மருத்துவர் முகமது இஜாஸ் தெரிவித்தார்.
“கடந்த தினங்களில் வாத்துக்கள் உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு நகராட்சி சபை தலையிட்டு, ஹோமாகம கால்நடை புலனாய்வுப் பிரிவுடன் ஒருங்கிணைந்து, உயிரிழந்த வாத்துகளின் உடல் திசுக்களில் பல சோதனைகளை நடத்தியது. மேலதிகமாக, இரத்த பரிசோதனைகள் மற்றும் மேலும் பல சோதனைகள் செய்யப்பட்டன. இந்நிலையில் Pasteurella multocida என்ற பற்றீரியாவால் இந்த பறவைகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். இருப்பினும், நிலைமையை மேலும் ஆய்வு செய்ய நாங்கள் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.”
மீதமுள்ள விலங்குகளுக்கு ஆண்டிபயாடிக் தடுப்பூசிகளை வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.