நீதிமன்றில் ஆஜரான ‘டீச்சர் அம்மா’

நீதிமன்றில் ஆஜரான ‘டீச்சர் அம்மா’

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளை நடத்தும் பிரபல ஆசிரியரான ‘டீச்சர் அம்மா’ என்று அழைக்கப்படும், ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்று (14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இளைஞர் ஒருவரை தாக்கியதற்காக அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை தொடங்கினர்.

சம்பவத்திற்குப் பிறகு, ஹயேஷிகா பெர்னாண்டோ அப்பகுதியை விட்டு ஓடி தலைமறைவாகியிருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் முகாமையாளர் இருவரும் அண்மையில் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அதன்படி, இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கு ஹயேஷிகா பெர்னாண்டோவும் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரான ஹயேஷிகா பெர்னாண்டோ மற்றும் நான்கு சந்தேக நபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, ​​தாக்கப்பட்ட இளைஞனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நீர்கொழும்பு நீதிமன்றத்தின் முன் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

COMMENTS

Wordpress (0)