மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட வரி திருத்தத்திற்கு அமைய, இந்த மாதம் முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான உள்ளக சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 46 % ஆனோர் குழாய் நீரையே பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், நீர் கட்டணத்துடன் சேர்க்கப்படும் வரி தொடர்பான சுற்று நிருபம் தேசிய நீர் வழங்கல் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
[threecolumns] அலகுகள் [/threecolumns][threecolumns] முன்பு அறவிடப்படும் விலை [/threecolumns][threecolumns class=”omega”] தற்போதைய புதிய விலை [/threecolumns]
10 அலகுகளைப் பயன்படுத்தும் வீடொன்றிற்கு 204 ரூபா 80 சதம் முன்னர் அறவிடப்பட்டதுடன், புதிய வரித்திருத்தத்திற்கு அமைய 212 ரூபா 18 சதம் அறவிடப்படவுள்ளது.
15 அலகுகளைப் பயன்படுத்தும் வீடொன்றிடம் 309 ரூபா 69 சதம் கட்டணம் அறவிடப்பட்டதுடன், புதிய திருத்தத்திற்கு அமைய 320 ரூபா 85 சதம் அறவிடப்படவுள்ளது.
20 அலகுகள் பயன்படுத்தும் வீடொன்றிற்கு 519 ரூபா 48 சதம் முன்னர் கட்டணமாக அறிவிடப்பட்டதுடன், புதிய திருத்தத்திற்கு அமைய 538 ரூபா 20 சதம் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
வீடொன்றில் 30 அலகுகள் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில், 1520 ரூபா 70 சதம் முன்னர் அறவிடப்பட்டதுடன், தற்போது 1575 ரூபா 50 சதம் அறவிடப்படவுள்ளது.
எவ்வாறாயினும், வரி அதிகரிப்பு மின்சாரக் கட்டணத்தில் தாக்கம் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.