நாளை(03) வரை தொடர்ந்தும் நீர் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO) – மொனராகலை நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மொனராகலை, குபுக்கன் ஓயா நீரில் எரிபொருள் மற்றும் கிரீஸ் கலந்ததன் காரணமாக நாளை(03) வரை குறித்த பிரதேசங்களுக்கு நீர்வெட்டு தடைப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் எல்பீஸியா வாயு மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து எரிபொருள் மொனராகலை, குபுக்கன் ஓயாவில் கலந்ததன் காரணமாக கடந்த 30 ஆம் திகதியில் இருந்து மொனராகலை நகர் மற்றும் அதை அண்மித்த பிரதேசங்களில் நீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.