SLFP – SLPP இடையிலான இணக்கப்பாட்டு சந்திப்பு அடுத்த வாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அடுத்த வாரம் இடம்பெற உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி தொடர்பில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதுவரை இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்ட சந்திப்பில் இறுதி இணக்கப்பாட்டை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.